ஸ்விகியில் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: தெனாவட்டாக பேசிய ஊழியர்!

By Manikanda Prabu  |  First Published Sep 6, 2023, 5:46 PM IST

ஸ்விகி ஊழியர் தான் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு மீதத்தை டெலிவரி செய்ததாக சென்னையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்


இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. ஆனால், அந்த உணவு வகைகளை டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது பல்வேறு புகார்கள் அண்மைக்கலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில், ஸ்விகி ஊழியர் தான் ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியை சாப்பிட்டு விட்டு மீதத்தை டெலிவரி செய்ததாக சென்னையை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை அருகே பெருங்களத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே ஒரு கடையில் ஸ்விகி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

Tap to resize

Latest Videos

ஆனால், பிரியாணி வழக்கத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாகவே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனால், கடும் பசியில் இருந்த சுரேஷ், உடனடியாக பிரியாணி பாக்ஸை திறந்து சாப்பிட தயாராகியுள்ளார். ஆனால், அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பிரியாணி பாக்ஸ் சரியாக சீலிடப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகத்துடன் திறந்து பார்த்தபோது, மட்டன் பிரியாணியின் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. மட்டன் பீஸ்களும் அதில் இல்லை.

ஜி20 உச்சி மாநாடு: பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை!

இதையடுத்து, உடனடியாக பிரியாணி ஆர்டர் செய்த கடையை தொடர்பு கொண்டு இதுகுறித்து அவர் கூறியுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களோ தாங்கள் முழு மட்டன் பிரியாணியைத்தான் கொடுத்து அனுப்பியதாக பதிலளித்ததுடன், தாங்கள் பேக்கிங் செய்யும் வீடியோவையும் சுரேசுக்கு அனுப்பியுள்ளனர். இதனால், ஸ்விகி ஊழியர் அதனை சாப்பிட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த அவர், பார்சல் டெலிவரி செய்த ஸ்விகி ஊழியர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த முத்துக்குமார், ‘ஆமாம் நான் தான் சாப்பிட்டேன். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.” என தெனாவட்டாக மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். எனவே, மறுபடியும் பிரியாணி கடைக்கு போன் செய்து இதுபற்றி கூறியுள்ளார். அதற்கு அவர்கள், தினமும் இதுபோன்று ஏராளமான புகார்கள் வருகின்றன. இதுகுறித்து ஸிவிகியிடம் நீங்கள் புகார் அளியுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, ஸ்விகி ஆப்பில் புகார் அளிக்க சுரேஷ் முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. இதனால், விரக்தியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது.

click me!