தலைநகர் சென்னையில் 896 தெருக்களுக்கு ஏற்பட்ட நிலைமை…! மாநகராட்சி அதிரடி

By manimegalai aFirst Published Sep 19, 2021, 7:12 AM IST
Highlights

சென்னையில் 896 தெருக்கள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:  சென்னையில் 896 தெருக்கள் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தினசரி பாதிப்புகள் பதிவாகி கொண்டே இருக்கின்றன. நேற்றைய தினம் தமிழகத்தில கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1653 ஆக குறைந்து காணப்பட்டது.

குறிப்பாக தஞ்சை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 204 பேருக்கு தொற்று இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் கிட்டத்தட்ட 896 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து இருக்கிறது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், 896 தெருக்களில் 5 பேருக்கு மேலும், 166 தெருக்களில் 3 பேருக்கு மேலும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 203 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளனர் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திருவிழா காலங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களும் மிகுந்த விழப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!