பைக் ரேஸ் ஓட்டினால்...? - பெற்றோர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை!!

Asianet News Tamil  
Published : Jun 05, 2017, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
பைக் ரேஸ் ஓட்டினால்...? - பெற்றோர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை!!

சுருக்கம்

chennai commissioner warning parents about bike race

கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இரவு நேரங்களில் பைக் ரேஸ் நடத்தி பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அவர்களது பெற்றோர்களும், தஙகளது பிள்ளைகளை கண்காணித்து எச்சரித்து வழி நடத்த வேண்டும் என கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

இதுகுறித்து  கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்து கூறியதாவது:-

பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, அடுத்த வாரம் காவல் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்துகிறோம்.

சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை, பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பைக் ரேஸ் ஓட்டுபவர்கள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீப காலமாக கல்லூரி மாணவர்கள், விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் பைக் ரேசில் ஈடுபடுகின்றனர். இதனால், பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த வாரம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு பெண் பலியானார்.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர்தான் முதலில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மாணவர்களை குற்ற சம்பவத்தில் ஈடுபடாமல் தடுக்க முடியும்.

PREV
click me!

Recommended Stories

பயன்பாட்டுக்கு வராத பயனற்ற ஓய்வூதிய திட்டம்..! அரசு ஊழியர்களை ஏமாற்ற முடியாது.. அன்புமணி கொந்தளிப்பு
நானும் ரவுடிதான் என்பது போல் நான் தான் கூட்டணிக்கு தலைவர் என்கிறார் பழனிசாமி.. முதல்வர் செம கலாய்..