கட்டாயப்படுத்தி விளையாட வைத்த மாணவி உயிரிழப்பு... கல்லூரி முற்றுகையால் பரபரப்பு

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 5:10 PM IST
Highlights

சென்னையில் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி விளையாட வைத்த போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தனியார் கல்லூரியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி விளையாட வைத்த போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த தனியார் கல்லூரியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலையூர் பேராசிரியர்கள் காலனியில் வசிப்பவர் ஜெயராஜ். கீழ்ப்பாக்கத்திலுள்ள தேவாலயத்தில் பாஸ்டராக உள்ளார். இவரது மனைவி பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர்களது மகள் மஹிமா (18). தாம்பரத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் முதலாமாண்டு படித்து வந்தார்.

 

இந்நிலையில், கல்லூரியின் 'ஸ்போர்ட்ஸ் பார் ஆல்' திட்டத்தில் அனைத்து மாணவர்களும் விளையாட வேண்டும் எனக்கூறி, மாணவி மகிமாவை கட்டாயப்படுத்தி கூடைப்பந்து விளையாட வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து மாணவியின் உடல், கிழக்கு தாம்பரத்தில் உள்ள அவரின் இல்லத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த கல்லூரி முதல்வர் அலெக்சாண்டரை, மாணவியின் உறவினர்களும் முற்றுகையிட்டனர். மாணவியின் இறப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் எனக் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மேலும் மாணவர்கள் கல்லூரியை முற்றுகையிட்டனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தரப்பில் இதுவரை வழக்கு பதிவு செய்யவி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!