
இந்தியாவிலேயே அதிக அளவில் காலாவதி பேருந்துகள் இயக்குவதில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் 73 சதவிகிதம் கோலாவதி பேருந்துகள் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதி பேருந்துகள் இயக்கப்படுவதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2009 முதல் 2016 வரையிலான ஆண்டு இடைவேளையில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது. காலாவதி பேருந்துகள் இயக்கப்படுவது மட்டுமல்லாது, மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுவதால் சாலைகளும் பழாகி உள்ளன. இதனாலும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
காலாவதி பேருந்துகள் இயக்கப்படுவதில் சென்னையை அடுத்து, அகமதமாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர், புனே ஆகிய இடங்கள் உள்ளன.
ஒரு மாநகர பேருந்தின் ஆயுட் காலம் 7 ஆண்டுகள் என்ற நிலையில் சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் 7 ஆண்டுகளையும் கடந்து இயக்கப்பட்டு வருகிறது. பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.