தாய்லாந்து பெண்ணை கற்பழித்த தொழிலதிபர்! கூல்டிரிங்ஸில் மயக்கமருந்து கொடுத்து சீரழித்துவிட்டு இந்தியாவிற்கு தப்பித்துவந்த கேடி...

First Published Jul 12, 2018, 12:28 PM IST
Highlights
chennai business rape man thailand women


தாய்லாந்து பெண்ணை சென்னையை சேர்ந்த தொழிலதிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை போலீசார் இதுவரை  நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த மே மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகார் மனுவில், தன்னை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் ஜெயின் மது போதையில் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக நம்பவைத்து மோசடி செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பித்து வந்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பெண் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனுவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. புகாரில் தெரிவிக்கப்பட்ட தொழிலதிபர்களான சூளையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் போலியான பதிவு திருமணத்திற்கு உடந்தையாக இருந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த விகாஸ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் நேரில் அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சென்னை தொழிலதிபர் மனோஜ் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்காக்கில் பப் ஒன்றில் தாய்லாந்து பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது அவர் தனக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் விகாஸ் முன்னிலையில் பேங்காக்கில் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், பதிவு திருமணத்தில் மனோஜ் ஜெயின் தனது நண்பர் சந்தோஷை கணவர் என போலியாக கையெழுத்திடவைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனிடையே மனோஜ் மூலம் அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மனோஜ் மற்றும் விகாஸ் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைக்க ஜூன் மாதம் இருவரும் ஜாமினில் வெளிவந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து மனோஜ், தாய்லாந்து பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. DNA பரிசோதனைக்காக தாய்லாந்து பெண் அவரது குழந்தையுடன் சென்னை வரவழைக்கப்பட்டார்.

மனோஜ் மற்றும் விகாஸ் இருவரும் தலைமறைவாகி விட்டதால், DNA பரிசோதனை தற்போது செய்ய இயலாது என மத்திய குற்றப் பிரிவு போலிசார் தாய்லாந்து பெண்ணிடம் தெரிவித்து அலைகழித்ததாக கூறப்படுகின்றது. இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த வழக்கிற்காக அடிக்கடி தாய்லாந்து நாட்டில் இருந்து தன்னை வரவழைக்கும் போலீசார் வழக்கில் அலட்சியம் காட்டுவதாக மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அந்த தாய்லாந்து பெண் செய்தியாளர்களை சந்திக்கையில், இந்தியாவில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்குமென நம்பி வந்ததாகவும், ஆனால் காவல்துறை துணையோடு குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு தான் ஏமாற்றப்பட்டு, அலைக்கழிக்கப்படுவதாகவும் கண்ணீரோடு புலம்பித்தள்ளியுள்ளார்.

click me!