OMRல் உள்ள Mall- ஐ 170 கோடிக்கு வாங்கிய அப்பல்லோ ஹாஸ்ப்பிட்டல்.. வெளியான தகவல் !

Published : Mar 29, 2022, 12:38 PM IST
OMRல் உள்ள Mall- ஐ 170 கோடிக்கு வாங்கிய அப்பல்லோ ஹாஸ்ப்பிட்டல்.. வெளியான தகவல் !

சுருக்கம்

சென்னை, அப்பல்லோ மருத்துவமனை ஓஎம்ஆரில் உள்ள வணிக வளாகத்தை  ரூ.170 கோடிக்கு வாங்கி உள்ளது.

ஓஎம்ஆர் உள்ள மால் :

சென்னையில், மார்க் (MARG) குழுமத்தால் ஓஎம்ஆரில் (OMR)  கட்டப்பட்டு வரும் ஜங்ஷன் மாலை (Mall) , 700-800 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்ற அப்பல்லோ மருத்துவமனை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்பல்லோ நிர்வாகம் சுமார் 170 கோடி ரூபாய்க்கு இந்த வணிக வளாகத்தை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

170 கோடி மதிப்புள்ள மால் :

திங்கள்கிழமையான நேற்று, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் மற்றும் சொத்து இரண்டையும் சேர்த்து சுமார் 155 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டது. மாநிலப் பதிவுத் துறை ஆதாரங்களின்படி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக 17 கோடி செலுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 2008-09 ஆம் ஆண்டளவில் பணிகள் தொடங்கப்பட்டாலும், 2012 இல் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி
ADMK Clash | மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?!