செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் தனித்ததனியாக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள்.. துடிதுடிக்க கொன்ற தாய்.. இறுதி அவர் என்ன செய்தார் தெரியுமா?
இந்நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் இருந்து நோயாளிகள், டாக்டர், செவிலியர் என உள்ளிட்ட 12 பேர் லிப்டில் ஏறியுள்ளனர். லிப்டு கீழ்நோக்கி இறக்க தொடங்கிய சிறிது நேரத்தில் பாராமல் தாங்காமல் இரும்பு கம்பி உடைந்து லிப்ட் பாதியிலேயே நின்றது. இதனால், லிப்டில் இருந்தவர்களின் அலறி கூச்சலிட்டதை அடுத்து அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. இப்படி அவசரப்பட்டுடிங்களே.. கதறிய தாய்.!