
பிரபல மணல் காண்ட்ராக்டரும். ஒபிஎஸ்சின் நெருங்கிய நண்பர் என அழைக்கப்படும் சேகர் ரெட்டி திருமலை தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆந்திர முதலமைச்சர் திரு சந்திர பாபு நாயுடு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சென்னையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 131 கோடி ரூபாய் பணமும் 127 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ. கைது செய்யப்பட்ட பொது ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்ட்டார். அந்த சமயத்தில் தமிழக அரசின் பரிந்துரையின் பெயரில் சேகர் ரெட்டி திருமலை தேவஸ்தான உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வருமான வரித்துறை ரெய்டில் சேகர் ரெட்டி சிக்கியதால் அவர் வகித்து வந்த திருமலை தேவஸ்தான பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.