மக்களே நோட் பண்ணிக்கோங்க! அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யுமாம்! வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்னும் 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மழை பரவலாகப் பெய்துவரும் நிலையில், இன்னும் மூன்று மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக பரவலான மழைப்பொழிவு காணப்படுகிறது.

Latest Videos

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) இன்னும் 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய பாம்பன் பாலம்! விரைவில் திறப்பு விழா!

சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

யூத வெறுப்பு... வார்த்தையை விட்ட எலான் மஸ்க்... விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்த ஆப்பிள், டிஸ்னி!

click me!