மயிலாப்பூரில் அடுத்தடுத்து செயின் பறிப்பு - இரண்டு வாலிபர்கள் கைது

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
மயிலாப்பூரில் அடுத்தடுத்து செயின் பறிப்பு - இரண்டு வாலிபர்கள் கைது

சுருக்கம்

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு , நேற்று மயிலாப்பூரில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பி ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 
சென்னை மைலாப்பூர்  இசபெல்லா மருத்துவமனை அருகே ந்நேற்று மாலை அம்பத்தூரை சேர்ந்த  அருகே பாக்கியலட்சுமி(55) என்ற பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்திலிருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். 
நகையை பறிகொடுத்த அவர் மைலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். இதே போல்  அதே சாலையில் இன்னொரு பெண்ணிடம் 2 சவரன் நகையை பறித்து சென்றனர். இது பற்றி தகலவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மைலாப்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். 
இதனிடையே மயிலாப்பூர் பகுதியில் ஐந்து சவரன் திருடிய வாலிபர்கள்  முரளி (20) ஆகாஷ்(22) என்ற இரண்டு வாலிபர்கள் ஆயிரம் விளக்கு பொலீசாரால் கைது செய்யப்பட்டனர். செயின் பறிப்பு நடந்த சில மணி நேரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 
மேலும் இவர்கள் கீழ்பாக்கம் , அபிராமிபுரம் , பட்டினப்பாக்கம் , ஆயிரம் விளக்கு , அண்ணாசாலை தொடர்ந்து இந்த பகுதியில் வீடு புகுந்து திருடுவது உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Gold Loan New Plan: தங்க நகைக்கடன் வாங்குவோருக்கு குட் நியூஸ்.! கிராமுக்கு Extra ரூ.2,000 கிடைக்க போகுது.! யாருக்கெல்லாம் பயன்?
Tamil Nadu Bypolls: 5 தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் ட்விஸ்ட்... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு