Latest Videos

புதிய அணைக்கு தடை கோரும் தமிழகம்; முல்லைப்பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு

By Velmurugan sFirst Published Jun 13, 2024, 12:21 PM IST
Highlights

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் ராகேஷ் கசியப் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014 ல் மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் 2022ல் இக்குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

Dharmapuri Crime: தருமபுரியில் பரபரப்பு; முகம் சிதைக்கப்பட்டு சிறார் கொடூர கொலை - போலீஸ் விசாரணை

தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்குமார் சிங் , கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் பிரியேஷ் உள்ளனர். இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 27ல் பெரியாறு அணையை ஆய்வுசெய்தனர். 

இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ள நிலையில், நடைபெறக்கூடிய ஆய்விற்கு கேரள மாநிலம் தேக்கடி படகுத்துறை பகுதியில் இருந்து அதிகாரிகள் படத்தின் மூலம் அணை பகுதிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து முல்லைபெரியாறு அணையில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி செய்துள்ள, செய்ய வேண்டிய வழக்கப்பணிகள் குறித்தும்,  மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, கேலரி பகுதி, வல்லகடவு பாதை உள்ளிட்டவற்றை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

திருச்சி எஸ்.பி.யின் தலைக்கு குறிவைத்து இன்ஸ்டாவில் மிரட்டல் பதிவு; சிறார்களை கண்டித்து அனுப்பிய போலீஸ்

அங்கு மதகுகளின் இயக்கம் சரிபார்த்தல், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் மாதிரிகள் சேகரிக்கப்படும். இன்றும், நாளையும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். கடந்த சில மாதங்களாக கேரளாவில் முல்லைப் பெரியாற்றின் புதிய அணை என்ற கருத்து நிலவி வரும் சூழலில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!