தமிழகத்தில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதா? அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?

By Narendran S  |  First Published Apr 27, 2023, 7:42 PM IST

திமுக ஆட்சிக்கு வந்த போது இருந்த மண்ணெண்ணெய் அளவு, தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 


திமுக ஆட்சிக்கு வந்த போது இருந்த மண்ணெண்ணெய் அளவு, தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 15,000 டன் மெட்ரிக் டன் கோதுமை வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கைது... காவல் நிலையம் முன்பு அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு!!

Latest Videos

கோதுமையை நேரடியாக கொள்முதல் செய்ய மாநில அரசை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது 7,536 லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் அளவு, தற்போது 2,712 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 2 முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் முறையான பதில் இல்லை.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பதில் அளிக்கும் பேது ஓடி ஒளிந்துகொள்பவர் தான் எடப்பாடி - அமைச்சர் விமர்சனம்

தமிழ்நாட்டில் 30 லட்சம் பேர் எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளனர். எரிவாயு இணைப்பு இல்லாமல் உள்ளவர்களுக்கு மாதத்துக்கு 3 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளாவர்கள் மண்ணெண்ணெய் வைத்தே வாழ்க்கை நடத்துகின்றனர் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

click me!