
திண்டுக்கல்
மாநில பிரச்சனைகள், எல்லையில் பதற்றம் ஆகியவற்றை மறைக்கவே மத்திய அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்களை பாதிப்படைய செய்யும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மக்களை பாதிப்படையச் செய்யும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வயலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், “மாநில பிரச்சனைகள், எல்லையில் பதற்றம் ஆகியவற்றை மறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் உணவக உரிமையாளர்கள், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை–எளிய மக்களுக்கு நியாயமான விலையில் மருந்து கிடைக்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, குடியிருப்பு மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள சாராயக் கடைகளை அப்புறப்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், மக்களுக்கு சேவை செய்யவும் கடந்த 4 மாதமாக வட்டார, நகர, மாநில நிர்வாகிகளை சந்தித்து வியூகம் அமைத்து வருகிறோம்.
உள்ளாட்சித் தேர்தலை அரசு முறையாக நடத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.