
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்பது தான் தற்போது மக்களின் எதிர்பார்ப்பு என்றும் . தேர்தல் வந்தால் தான் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும். அது நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்..
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தளி அணியாக பிரிந்த பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து வருகிறார். காஞ்சிபுரம், திண்டுக்கல், சேலம் என தொடர்ந்சியாக தொண்டர்களை சந்தித்து வரும் அவர் நேற்று நாகையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி சசிகலாவின் பினாமி ஆட்சி என்றும் 100 அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் 122 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு ஆமை வேகத்தில் ஆட்சியை நகர்த்தி விடலாம் என்று சசிகலா தரப்பினர் தப்பு கணக்கு போட்டுக்கொண்டு அந்த நம்பிக்கையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
அதிமுக ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் சென்றுவிடக்கூடாது என்று எண்ணித்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் கட்சியை கொண்டு செல்லவில்லை என குறிப்பிட்ட ஓபிஎஸ் நமது அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றாமல் இணைவோம் என்று ஒரு பொய்யை மெய்யாக கூறுகிறார்கள் என தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் திட்டங்களை முடக்கியதோடு, எதையும் செயல்படுத்த முடியாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்றும் மக்களின் எந்த பிரச்சினையையும் அரசு கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் அப்படி தேர்தல் வந்தால்தான் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்...