கனமழை பாதிப்பு… ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு!!

By Narendran SFirst Published Nov 18, 2021, 6:14 PM IST
Highlights

தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் குழுவினர் உடனடியாக தமிழகம் வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் குழுவினர் உடனடியாக தமிழகம் வருகின்றனர். டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தி.மு.க., எம்.பி. டி.ஆர்.பாலு, சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெய்த கன மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதுடன், மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி ஆகி உள்ளது. கனமழை கொட்டிய 25 மாவட்டங்களில், 15 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் 9,600 குடிசைகள், 2,200 வீடுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன. அத்துடன் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிர்கள் நாசமடைந்துள்ளன.

இதில் 526 ஹெக்டேரில் இருந்தவை தோட்டக்கலை பயிர்கள். மழை பாதிப்பால் 54 பேர் பலியாகி உள்ளனர். சராரியை விட கூடுதல் மழை பெய்துள்ளதே பாதிப்பிற்கான காரணம், எனவே மத்திய அரசின் நிவாரண நிதி அவசியமாகிறது. தமிழக அரசின் மதிப்பீட்டின்படி 2,079 கோடி ரூபாய் வரை மத்திய அரசு வழங்க வேண்டும். அதில் முதற்கட்டமாக 550 கோடி ரூபாரயை உடனடியாக வழங்கினால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். மேலும் தமிழகத்தின் மழை மற்றும் வெள்ள நிலவரங்களை கவனித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். மேலும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஆறு பேர் அடங்கிய குழுவை உடனடியாக அனுப்புவதாகவும் அவர் கூறினார். அதிகாரிகள் குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நிவாரண தொகை குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமித் ஷா கூறினார் இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் மழை வெள்ள சேதங்களை பார்வையிட மத்தியக் குழு தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக விளை நிலங்கள் மற்றும் சாலைகள் போன்றவை வெகுவாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய வருகை தரவுள்ள மத்திய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் குழுவினர் உடனடியாக தமிழகம் வருகின்றனர். இந்த குழுவில் விவசாயம், உழவர் நலன், நிதி, நீர்வளம், மின்சாரம், சாலை போக்குவரத்து, ஊரக வளர்ச்சி ஆகிய 6 முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளைய தினமே தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவிடம் உரிய விவரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குழுவினர் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்து ஒரு வாரத்தில் மத்திய உள்துறைக்கு அறிக்கை அளிப்பர். இந்த ஆய்வு முடிவில் கொடுக்கும் அறிக்கையைப் பொருத்துதான் தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் குழு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நிவாரண தொகை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

click me!