புளியங்குடியை சேர்ந்த 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார் தென்காசி மாவட்டம் சிங்கிலிப்பட்டி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
தென்காசி அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்தி விபத்தில் 6 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புளியங்குடியை சேர்ந்த 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார் தென்காசி மாவட்டம் சிங்கிலிப்பட்டி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், காருக்குள் இருந்த 6 பேரும் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- கணவன் கண்முன்னே துடிதுடித்து பலியான புதுமணப் பெண்.. படுகாயங்களுடன் ஐயோ என்ன விட்டுட்டு போயிட்டியே கதறல்!
இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு அவ்வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் நீண்ட நேரம் போராடி லாரிக்கு அடியில் சிக்கிய காரை மீட்டனர். பின்னர் உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையா? இழுத்து மூடப்பட்ட கேட்.. விளக்கம் அளித்த காவல்துறை!