இந்த தீபாவளியை மது இல்லா தீபாவளியாக கொண்டாடுங்கள் – நாகையில் விழிப்புணர்வு பிரச்சாரம்…

 
Published : Oct 09, 2017, 07:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
இந்த தீபாவளியை மது இல்லா தீபாவளியாக கொண்டாடுங்கள் – நாகையில் விழிப்புணர்வு பிரச்சாரம்…

சுருக்கம்

Celebrate this Deepavali as a non-alcoholic beverage - Awareness Campaign in Snake ...

நாகப்பட்டினம்

இந்த தீபாவளியை மது இல்லாத தீபாவளி கொண்டாடுங்கள் என்று நாகப்பட்டினத்தில் துண்டுப் பிரசுரம் வழங்கி விமோசனம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அமைப்பின் சார்பு அமைப்பான விமோசனம் இயக்கம் சார்பில் துண்டுப் பிரசுரங்களை வழங்கப்பட்டன. அதில், “இந்த தீபாவளியை சாராயம் இல்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அந்த அமைப்பின் நிர்வாகி திருவடிக் குழல் சுவாமிகள், “ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மது விற்பனை பல நூறு கோடிகளைத் தாண்டிச் செல்கிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்திச் செல்கிறது.

எனவே, “மது இல்லாத தீபாவளி” என்னும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம். இதன்படி திருவள்ளுவர், ஒளவையாரின் நீதிநெறி வழிகாட்டுதலுடன், சாணக்கியர், வாரியார் சுவாமிகள் போன்ற பெரியோர்களின் அறிவுரைகள், பிரதமர் மோடி கூறிய மது குறித்த அபாய எச்சரிக்கை ஆகியவை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!