நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த தயார் - தமிழக அரசு உத்தரவாதம்

 
Published : Oct 18, 2016, 06:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த தயார் - தமிழக அரசு உத்தரவாதம்

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு  கேமிரா பொருத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து , விசாரணை நவம்பர் 21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நீதிமன்ற வாளகங்கள் மற்றும் நீதிமன்ற அறைகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படவேண்டும் என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு  இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கவுல் கிஷன், ஆர்.மாகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிமன்றங்களில் கேமிராக்கள் பொருத்துவதற்கு ஆகும்.  செலவு குறித்த திருத்திய மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்வதாக உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில் ஆஜாரன அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைகளில் கேமிராக்கள் பொருத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக  தெரிவித்தார். இதுசம்பந்தமாக அறிக்கை அளிக்க போதிய கால அவகாசம் வேண்டும் என கோரினார்.

இதையடுத்து இந்த  வழக்கு விசாரணை நவம்பர் 21க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

PREV
click me!

Recommended Stories

வெயிட் அண்ட் சீ.. சுட்டெரித்த வெயில்.. மழை குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!
100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!