
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி விளையாட்டு நடைபெறும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நவம்பர் 4-ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதனையடுத்து வரும் நவம்பர் 4-ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசை பெறும் போட்டியாளர்கள் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.