காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி..!! குளிக்க சென்றபோது சோகம்

 
Published : Oct 18, 2016, 05:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி..!! குளிக்க சென்றபோது சோகம்

சுருக்கம்

சேலம் அருகே இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம்
 காடையாம்பட்டி வட்டம், உம்பிளிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ராகுல் இவர், தனது உறவினரின் இறுதிச் சடங்கையொட்டி மேட்டூர் காவிரி ஆற்றில் நீராட உறவினர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது, காவிரி ஆற்றில் குளிப்பதற்காக உயரமான பகுதியில் இருந்து ஆற்று நீரில் குதித்ததாக கூறப்படுகிறது.

இதில் எதிர்பாராத விதமாக ராகுல் நீரின் அடியில் இருந்த பாறையில் மோதியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராகுல் நீரில் முழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு
சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!