முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… சிபிஐ அதிரடி நடவடிக்கை!!

By Narendran SFirst Published Nov 23, 2022, 9:41 PM IST
Highlights

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அமைச்சர்கள் சிக்கினர். அதில், விஜயபாஸ்கரும் ஒருவர். அதிமுக ஆட்சியின் போது தடை செய்யப்பட்ட குட்கா உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்ததாகவும் அதற்காக அவர் பெரும் தொகையை லஞ்சமாக வாங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிங்க: கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்... தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!!

மேலும் அப்போது டிஜிபி-யாக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதை அடுத்து இதுத்தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து குட்கா வியாபாரி மாதவ ராவ், கலால்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கைதுசெய்தது.

இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கு… கிஷோர் கே சுவாமிக்கு ஜாமீன்!!

மேலும்கடந்த ஜூலை மாதம் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்த நிலையில் குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டி.ஜி.பி.க்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

click me!