விநாடிக்கு 1,35,000 கனஅடி! ஓகனேக்கல்க்கு சீறிப்பாயும் காவிரி நீர்!

Published : Aug 11, 2018, 11:53 AM ISTUpdated : Sep 09, 2018, 07:16 PM IST
விநாடிக்கு  1,35,000 கனஅடி! ஓகனேக்கல்க்கு சீறிப்பாயும் காவிரி நீர்!

சுருக்கம்

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்துக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்துக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 
இன்று  காலை  நிலவரப்படி விநாடிக்கு  1,35,000 கனஅடியாக  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலங்களிலுள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நீர்மட்டம் 83 அடியைத் தாண்டியுள்ளது.

அந்த அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதேபோல கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 124 புள்ளி 25 அடியாக உள்ளது. அந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 710 கன அடியாக உள்ளது.

இதனால், கபினியில் இருந்து 90 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 45 ஆயிரம் கன அடியும் என மொத்தம் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் நாளை நள்ளிரவில் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று  காலை  நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர்  காவிரியில் வந்துகொண்டிருந்த நிலையில் மாலை  6-00 மணி  நிலவரப்படி     ஒரு  லட்சத்து  இருபது  ஆயிரம் கனஅடியாக  தண்ணீர்  வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து  இன்று  காலை  நிலவரப்படி விநாடிக்கு  1,35,000 கனஅடியாக  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 135 புள்ளி 5 பூஜ்ஜியமாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 311 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 89 புள்ளி ஐந்து மூன்று டி.எம்.சி.யாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு 19 ஆயிரத்து 341 கன அடி வீதமும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 800 கன அடி வீதமும் நீர் வெளியேற்றப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!