பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக்கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? - மநீம கேள்வி..

Published : Jun 17, 2022, 04:57 PM IST
பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக்கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? - மநீம கேள்வி..

சுருக்கம்

சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல.பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக்கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா? என்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கவலை தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் இன்று ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரிடம் உதவி தலைமை ஆசிரியை சாதி ரீதியாகப் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சாதிப்பற்று கூடாது என்று மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, சாதி வெறியைத் தூண்டுவதுபோல பேசுவது ஏற்கத்தக்கதல்ல. பள்ளிகளில் பரவும் சா`தீ'... கற்றுக்கொடுக்க வேண்டியவரே கெட்டுப் போகச் செய்யலாமா?

இன்னமும் சாதி என்னும் தீயை அணைக்காமல், ஊதிக்கொண்டே இருந்தால், எதிர்கால சமுதாயத்தை அழித்துவிடும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுப்பதுடன் ஆசிரியர், பெற்றோர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்'' என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: மாணவனிடம் சாதிய ரீதியாக பேசிய ஆசிரியர்.. சர்ச்சைக்குள்ளான ஆடியோ.. பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்