ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By SG Balan  |  First Published Jan 4, 2024, 5:03 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவையாகத் திகழ்கின்றன.

Latest Videos

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது சாதியின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

தீண்டாமை உறுதி மொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்யவும் மதுரை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான இடத்தில் வைத்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும் பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

click me!