சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளுடன் உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ஜே.என்.1 வகை திரிபு கொரோனா தொற்றானது உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் ஜெ.என்.1 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இந்த தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழக, கேரளா எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து தீவி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
undefined
திருப்பூரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை
இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 31ம் தேதி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரையாண்டு தேர்வில் 60% மதிப்பெண் எடுத்த மாணவன்; பெற்றோர் நன்றாக படிக்க சொன்னதால் தற்கொலை