நில மோசடி செய்தால் கடும் நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...

 
Published : May 07, 2017, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
நில மோசடி செய்தால் கடும் நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...

சுருக்கம்

Case for fraudulent land scam - Chennai High Court warns

நில மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி பள்ளிகரணை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவர் தனது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து விட்டதாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் பள்ளிக்கரணையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக எத்தனை வழக்குகள் வந்துள்ளன என கேள்வி எழுப்பினார்.

மேலும் புகார், வழக்குகள் குறித்த விவரங்களை ஜூன் 12 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

நில மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!