
விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொள்ளததால் மே 21 ஆம் தேதி பிரதமர் இல்லம் முற்றுகையிடப்படும் என தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அப்போது டெல்லி வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவ்வாறு மத்திய அரசு உங்களுக்கு உதவ முன்வர வில்லை என்றால் தமிழக அரசு செய்யும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில், தேசிய நதிநீதி இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
டெல்லியில் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் இல்லம் முற்றுகையிடப்படும்.
மே 21 ஆம் தேதி டெல்லியில் 300 விவசாய சங்கத்துடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அடுத்த வாரத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.