பைக் மீது மோதிய அரசு பேருந்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

 
Published : May 07, 2017, 05:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பைக் மீது மோதிய அரசு பேருந்து  - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

சுருக்கம்

accident in coimbatore

கோவை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்துவராயபுரத்தில் இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பிச்சைக்காரனா நீ.?? உயிர் நாடியில் எட்டி உதைத்தார் சவுக்கு சங்கர்! புகார் கொடுத்த தயாரிப்பாளர் பகீர் விளக்கம்
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!