இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் தவறான செய்தியை பரப்பியதாக கூறி அவர் மீது வழக்கு தொடர இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போலீஸ் அதிகாரி மீது வழக்கு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், ஒரு போலீஸ் அதிகாரி, உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், நான் கூறியதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துக்கள் ஓட்டுகள் வேண்டாம் என நான் சொன்னதாக பதிவு செய்துள்ளார்.
இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன். இன்று இந்த செய்தி இன்று வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் திராவிட மாடல் ஆட்சியை திருப்பி அனுப்ப கங்கனம் கட்டி செயல்படுகின்றனர். அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தல் எனவும் தெரிவித்திருந்தார்.
யார் இந்த நடராஜ்.?
இந்தநிலையில் யார் இந்த போலீஸ் அதிகாரி என விசாரிக்கையில், அந்த அதிகாரி முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையராகவும், தீயணைப்பு துறை டிஜிபியாகவும் இருந்து ஓய்வு பெற்ற நட்ராஜ் என தெரியவந்தது. இவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர். அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்தநிலையில் வாட்ஸ் குழு ஒன்றில் நட்ராஜ் தனியார் தொலைக்காட்சி பெயரில் வெளியான போலியான பதிவை பார்வேர்டு செய்துள்ளார்.
போலி செய்தியை பகிர்ந்த நடராஜ்
அதில், இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்வோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்கள் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்து போகவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தகவல் இடம்பெற்றுள்ளது. போலியான சித்தரிக்கப்பட்ட செய்தியை அணைவருக்கும் பகிரும் படி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்