புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் போலீஸாரை கண்டித்து போராட்டம்; மறியல் செய்தவர்கள் மீது வழக்குபதிவு...

 
Published : May 10, 2018, 08:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் போலீஸாரை கண்டித்து போராட்டம்; மறியல் செய்தவர்கள் மீது வழக்குபதிவு...

சுருக்கம்

Case against 40 people who protested against police did not take action against the complaint ...

புதுக்கோட்டை 

கறைகளை சூறையாடியவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத ஆலங்குடி காவலாளர்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (25). ஆலங்குடி கலிபுல்லா நகரைச் சேர்ந்தவர் முகமது அப்துல்லா (36). 

இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முருகானந்தம் ஆலங்குடி காவலாளர்களால் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு கலிபுல்லா  நகருக்கு சென்று பூட்டியிருந்த கடைகளையும், பெயர் பலகைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். 

இதனால் கலிபுல்லா நகரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் காவலாளர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கலிபுல்லா நகரைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் ஆலங்குடி - வடகாடு முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி காவலாளர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலை ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலிபு, இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டத்தை நடத்தினார். 

இதில், "தொடர்ச்சியாக இருந்து வரும் கருத்து வேறுபாடு சம்பந்தமாக இரண்டு தரப்பினரிடையே எவ்வித மோதல் சம்பவங்களும் இனிமேல் நடைபெற கூடாது. மேலும், இனிமேல் எவரேனும் பிரச்சனையில் ஈடுபட்டால் உடனடியாக காவலாளர்களை அணுகி புகார் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் ஆட்களை சேர்த்து கொண்டு பிரச்சனையில் ஈடுபடக் கூடாது" என்று அறிவுறுத்தினார். 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!