காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி ; 7 பேர் படுகாயம்...!

 
Published : Dec 27, 2017, 07:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி ; 7 பேர் படுகாயம்...!

சுருக்கம்

Car lorry accident 3 died 7 injured

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். 

காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் என்ற இடத்தில் பஞ்சு ஏற்றி வைத்த லாரியும் கோவையை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பஞ்சு ஏற்றிவந்த லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. இதில் கோவை கீழமேடு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் உட்பட மூன்று பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜேசிபி உதவியுடன் காரை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!