
நடுரோட்டில் மக்களோடு மக்களாக இணைந்து காபி குடிக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து இன்று அம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அமைச்சரவை சிம்லாவில் பதவியேற்றது.
இதற்காக சிம்லா சென்ற பிரதமர் மோடி,பதவியேற்பு விழா முடிவடைந்ததும், அவருக்கு மிகவும் பிடித்தமான காபியை அருந்த தெருக்கடைக்கே சென்றார்.
பின்னர்,பல ஆண்டுகள் கழித்து இப்போது அதனை நினைவு கூறுவதாகவும்,அந்த சுவை அன்று போல் இன்றும் உள்ளது என்று பெருமை கொண்டுள்ளார் மோடி.
இதனை பிரதமர் மோடி அவர்களே அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.