
இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது பல புதிய மாற்றங்களை செய்து வறிகிறது
பயணிகளின் வசதிக்கு ஏற்ப,தனி ஆப்ஸ் உருவாக்கி அதன் மூலமே டிக்கெட் பதிவு செய்யவும் பல ஏற்பாடுகள் செய்தது
இந்நிலையில், பிளக்சி பிளான் என்ற திட்டம் மூலம் கட்டணத்தை உயர்த்தியது.
மேலும் இரவு நேரத்தில் மட்டும், உறங்க வசதியாக இருக்கைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் பல கெடுபிடிகளை விதித்தது.
மேலும்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தை வைத்துள்ள தாய்மார்கள்,பெரியவர்கள், உடல் நலம் முடியாதவர்கள், ஜன்னலோர இருக்கை மட்டுமே வேண்டும் என விருப்பப்பட்டு தேர்வு செய்பவர்கள் என அனைவருமே கீழ் தளத்தை தான் தேர்வு செய்வார்கள்
அதிலும் குறிப்பாக,ஜன்னல் ஓர சீட்டை தேர்வு செய்தால் அதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி மக்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதுமட்டும் இல்லாமல், இவ்வாறே சென்றால், இனி வரும் காலங்களில் மேலும் பல மாற்றங்களை கொண்டு வரும் ரெயில்வே நிர்வாகம் என பலரும் இப்போதே புலம்ப ஆரம்பித்து உள்ளனர்.