#BREAKING கார் டயர் வெடித்து விபத்து.. பெண் சார் ஆட்சியர் ராஜாமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!

Published : Apr 15, 2022, 11:07 AM IST
#BREAKING கார் டயர் வெடித்து விபத்து.. பெண் சார் ஆட்சியர் ராஜாமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..!

சுருக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட சார் ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் காலை சங்காரபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, சங்கராபுரத்தை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 

சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் டயர் வெடித்து விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்ட சார் ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் காலை சங்காரபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, சங்கராபுரத்தை நெருங்கிய போது எதிர்பாராத விதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 

சார் ஆட்சியர் உயிரிழப்பு

இதில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இந்த விபத்தில் காரில் பயணித்த சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.  இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த ராஜாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்