திருச்சி அருகே பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்... 4 பேர் உயிரிழப்பு

Published : Nov 19, 2018, 12:09 PM ISTUpdated : Nov 19, 2018, 12:10 PM IST
திருச்சி அருகே பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல்... 4 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

திருச்சி அருகே டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய கார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அருகே டயர் வெடித்து தறிகெட்டு ஓடிய கார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் இன்று அதிகாலை திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் அளுந்தூர் என்ற இடத்தில் மின்னல் வேகத்தில் சிறிபாய்ந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் சுவரை இடித்து தள்ளி எதிர்ப்புற சாலையில் பாய்ந்தது. அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து வந்த அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியது.

 

விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 5 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காரில் வந்த ரமேஷ் பாண்டியன் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் சமார் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து .முடங்கியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?
ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!