
புதுக்கோட்டை
நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 54-வது நாளாக மக்கள் போராடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனைக் கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இளைஞர்கள், மக்கள், சிறுவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டி போராடினர். இரண்டு வாரங்களுக்கு மேலாக போராடிய போராட்டக்காரரகளை மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் போன்ற மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் சென்று சந்தித்தனர்.
மக்களுகு விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் மத்திய மோடி அரசு செயல்படுத்தாது என்றும், நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டிக் கொண்டனர்.
மக்களும் இந்த பிரதிநிதிகளை நம்பி போராட்டத்தைக் கைவிட்டனர். அடுத்த நாளே மத்திய மோடி அரசு ஐட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து நம்பிய மக்களுக்கு துரோகம் இழைத்தது.
மத்திய அரசின் இந்த செயலைக் கண்டு மனமுடைந்த மக்கள், ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த மாதம் தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டம் நெடுவாசலில் நேற்று 54-வது நாளைத் தொட்டது. அப்போது ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக முழக்கங்களாஈ எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 11 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.