“தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் காவலருக்கு கூட பாதுகாப்பு இல்லை. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக, போலீஸ்காரர் ஒருவரே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை தான் திமுக ஆட்சியில் உள்ளது” என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் காவலருக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி, நாகர்கோவிலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
undefined
பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க.வினரை தன் குடும்பம் எனக் கூறும் ஸ்டாலின், கட்சித் தலைவராக ஒரு தொண்டரை நிறுத்துவாரா? வாக்குகளைப் பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்." என்று கூறினார்.
"இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க தான்; சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்." என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்துவரி போடமாட்டோம் என்கிறார்கள். ஆனால் இன்று 150% வரி உயர்த்தியுள்ளார்கள். மின் கட்டணத்தை 52% உயர்த்தியுள்ளார்கள். கடைகளுக்கு 2 மடங்கு அதிக கட்டணம் விதிக்கிறார்கள் pic.twitter.com/1KFVO8r0hT
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial)“தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் காவலருக்கு கூட பாதுகாப்பு இல்லை. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. திமுக நிர்வாகி ஒருவர் தாக்கியதாக, போலீஸ்காரர் ஒருவரே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நிலை தான் திமுக ஆட்சியில் உள்ளது” என்றும் இபிஎஸ் தெரிவித்தார்.
தமிழகத்தின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கஞ்சா ஆபரேஷன் 2.ஒ 3.ஒ என "ஓ" போட்டுவிட்டு சென்றுவிட்டார் என்று சாடிய இபிஎஸ், விடிந்தால் திமுகவினரால் என்ன நடக்குமோ? என்று பொதுக்குழுவில் திமுக தலைவர் பேசுகிறார்; எப்படி இவரை நம்பி நாட்டை கொடுப்பது? என்றும் கேள்வி எழுப்பினார்.
மின் கட்டணம் 52% உயர்த்தப்பட்டுள்ளது; இப்படி மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எப்படி சமாளிப்பார்கள்? என்று ஈபிஎஸ் கூறினார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலையே காரணம் எனவும் திமுக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி குறை கூறினார்.