"இனி தியேட்டருக்கு போகாமல் வீட்டில் இருந்தபடியே புது படங்கள் பார்க்கலாம்" - கேபிள் ஆபரேட்டர்கள் அதிரடி முடிவு!!

First Published Jul 3, 2017, 10:44 AM IST
Highlights
cable operators about new films in tv


டிடிஎச் மற்றும் செட்டாப் பாக்ஸ் வழியாக இலவச சேனல்கள் மற்றும் கட்டண சேனல்களைப் பெற்று வருகிறோம். இந்த நிலையில் டிடிஎச் மற்றும் செட்டாப் பாக்ஸ் வழியாக திரைப்பட வீடியோ கிளிப்பிங்ஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை வழங்க தமிழக கேபிள் டிபி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் முடிவு செய்துள்ளது. 

இது குறித்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாநில தலைவர் ஆறுமுகம் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கேபிள் டிவி டிஜிட்டல் அமலாக்கம் துவங்குவதை தொடர்ந்து இலவச சானல்களை பொதுமக்களுக்கு இலவசமாக மற்றும் கட்டண சேனல்களை SMS எனும் சாப்ட்வேர் வழியாக கட்டணம் வசூலித்து பார்க்கும் வசதியை DTH மற்றும் செட்டாப் பாக்ஸ்கள் பெற்றுள்ளன.

தற்போது தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களால் இணைந்து நடத்தப்படும் கூட்டுமுறை நிறுவனங்களை ஒருங்கிணைத்து இத்திட்டத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

தயாரிப்பாளர்கள் எங்கள் வழியாக இதை வெளியிடுவதால் சுமார் 1.5 கோடி இல்லங்களுக்கு தெளிவான ஆடியோ வீடியோவுடன் சென்றடையும்.

தயாப்பாளர்களும், தியேட்டரில் ரிலீஸ் டென்சன் இன்றி தாங்கள் தயாரிக்கும் படத்தின் தரத்திற்கேற்ப வசூலைப் பெறலாம். விரைவில் தயாரிக்கப்பட்டு பாதியில் நிற்கும் தரமான கதை அம்ச படங்களை நிதி உதவி அளித்து படத்தை கேபிள் டிவியில் ரிலீஸ் செய்ய வைக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம்.

தமிழக மக்கள் தொகையில் கேபிள் டிவி பயன்பாட்டில் 80 சதவீத இடத்தை கேபிள் டிவிக்கள் பிடிப்பதால் திரைப்பட சரித்திரத்தில் இந்த திட்டம் மாபெரும் வரவேற்பை பெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!