பஸ் சக்கரத்தில் சிக்கி 6ம் வகுப்பு மாணவன் பலி – சுங்குவார் சத்திரத்தில் சோகம்

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 03:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
பஸ் சக்கரத்தில் சிக்கி 6ம் வகுப்பு மாணவன் பலி – சுங்குவார் சத்திரத்தில் சோகம்

சுருக்கம்

அரசு பஸ்சில் ஏறும்போது கால் தவறி விழுந்த பள்ளி மாணவன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அரிசர்வேஸ்வரன் (10). திருவள்ளூர் அடுத்த பண்ணூரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளி செல்வதற்காக சுங்குவார்சத்திரம் வந்தான். அப்போது பண்ணூர் வழியாக திருவள்ளுர் செல்லும் அரசு பஸ் வந்தது. அதில் ஏறுவதற்கு பள்ளி மாணவன் அரிசர்வேஸ்வரன் சக மாணவர்களுடன் முண்டியடித்து சென்றான்.

அப்போது கால் தவறி விழுந்தான். கீழே விழுந்த அரிசர்வேஸ்வரன் பஸ் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.
தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன்சார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா.

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!