
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொங்காலியூர் என்ற கிராமத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, பில் சின்னம்பாளையம் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது எதிரே வந்த ஜூப் நிலைதடுமாறி பேருந்தின் வலது பக்க ஓரத்தில் மோதியது.
இதில் பேருந்து அருகே இருந்த மரட்தின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் உடுமலையைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பயணிகள் 18 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த கோட்டூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.