கடந்த வருடம் உயிரிழந்தோர் 17,218 பேர்... சாலை விபத்தில் தமிழகம் முதலிடம் - அதிர்ச்சி தகவல்!!

First Published Jul 4, 2017, 3:18 PM IST
Highlights
tamilnadu got 1st place in road accidents


தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடைபெற்ற 71431 விபத்துகளில் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 1576 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். இதனால் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 2-வது வாரத்தில் தொடங்கி 10 நாட்களுக்கு சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால் விபத்துக்கள் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.

விபத்தில் சிக்குவோரை மீட்பது, சிகிச்சை அளிப்பது போன்றவற்றுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடப்படுவதாகவும், மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சாலை பாதுகாப்பில் அரசு அக்கறையில்லாமல் செயல்படுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் நடைபெற்ற 71431 விபத்துகளில் 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 1576 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் 15,422 பேரும், 2012 ஆம் ஆண்டு 16,175 பேரும், 2013 ஆம் ஆண்டில் 15,563 பேரும், 2014 ஆம் ஆண்டு 15,190 பேரும், 2015-ல் 15,642 பேரும் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.

click me!