வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து வழக்கு – கட்டட உரிமையாளர் கைது...

First Published Jun 5, 2017, 6:39 PM IST
Highlights
building owner vijaykumar arrested about vadapalani coat-res fire in may 8


வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த வழக்கில் கட்டட உரிமையாளர் விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த மே 8 ஆம் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீ பற்றி அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதிகாலை என்பதால் வீட்டில் இருந்தவர்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். இதனால், அவர்களை வெளியேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அங்கு இருந்தவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே தீ காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுதிணறல் காரணமாகவே நான்கு பேரும் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டட உரிமையாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மரணத்திற்கு காரணமானவர்கள் என்ற பிரிவின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.  

click me!