
சென்னை மாநகர காவல்துறையின் ஆணையராக நியமிக்கப்பட்ட கரன்சிஹா விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
யார் இந்த கரன்சின்ஹா
உத்தராஞ்சல் மாநிலம் தேரி பகுதியைச் சேர்ந்தவர் கரன்சின்ஹா. 1987 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் சில காலம் மத்திய அரசு பணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் காவல் துணை ஆணையராக பணியைத் தொடங்கினார்.
டி.ஐ.ஜி.(சி.பி.சி.ஐ.டி) டி.ஐ.ஜி(லஞ்ச ஒழிப்பு) கோவை ஆணையர், சென்னை புறநகர் ஆணையர், மத்திய மண்டல ஐஜி, சிவில் சப்ளை ஐ.ஜி, பல பொறுப்புகளை வகித்தவர் கரன்சின்ஹா.
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வரும் இவர் 2016 சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார்.
பின்னர் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் மீண்டும் சி.பி.சி.ஐ.டி கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையராக முதல்முறையாக கரன்சின்ஹா இன்று பதவி ஏற்கிறார்.
சேலம்- சென்னை விரைவு ரயிலில் வங்கிப்பணம் 5.75 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கரன்சின்ஹா விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.