விரைவில் நடைபெற உள்ள 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், லோக்சபா தேர்தல் தேதி தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

04:09 PM (IST) Mar 16
தமிழகத்தில் எப்போது மக்களவை தேர்தல் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
04:03 PM (IST) Mar 16
லோக்சபா தேர்தல் 2024 அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் என்றும், ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்என்றும் தெரிவித்துள்ளது.
03:51 PM (IST) Mar 16
Loksabha Elections 2024 : மக்களவை தேர்தல் குறித்த முக்கியமான தகவல்களை தற்பொழுது இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவிக்க தொடங்கியுள்ளார். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
02:12 PM (IST) Mar 16
01:31 PM (IST) Mar 16
100 வருடங்களாக யாரும் இறக்காத உலகின் புகழ்பெற்ற இடத்தை பற்றியும், அதில் ஒளிந்துள்ள ரகசியத்தை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
12:42 PM (IST) Mar 16
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
12:01 PM (IST) Mar 16
கன்னியாகுமரி கோவில்களுக்கு மட்டுமின்றி வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்றது. நாட்டில் உற்பத்தியாகும் கிராம்புகளில் 65 சதவீதம் கன்னியாகுமரியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கிராம்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, இதற்கும் பல காரணங்கள் உள்ளன.
11:14 AM (IST) Mar 16
புது டெல்லியில் உள்ள பிரபல உணவகத்தில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
10:32 AM (IST) Mar 16
காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
10:32 AM (IST) Mar 16
சூளகிரி திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரான கார்த்திக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10:21 AM (IST) Mar 16
இவிஎம்மில் கோளாறு இருப்பதாக பல்வேறு கட்சிகள் அடிக்கடி குற்றச்சாட்டுக்கள் வைத்து வருகின்றது. உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? இல்லையா, அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்களை தெரிந்து கொள்வோம்.
08:55 AM (IST) Mar 16
08:26 AM (IST) Mar 16
ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய மானியம் தொடங்க உள்ளதால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பைக்குகளின் விலை சுமார் 10 சதவீதம் அதிகரிக்கும்.
08:17 AM (IST) Mar 16
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
08:16 AM (IST) Mar 16
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக OMR சாலையில் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
08:07 AM (IST) Mar 16
07:39 AM (IST) Mar 16
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலவாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் திங்கள்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
07:38 AM (IST) Mar 16
இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது