Published : Aug 15, 2023, 06:57 AM ISTUpdated : Aug 15, 2023, 01:57 PM IST

Independence day Live Tamil Updates : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரடி நிகழ்வு!!

சுருக்கம்

Independence day Live Tamil Updates: நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியேற்றினார். முதல்வர் ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

Independence day Live Tamil Updates : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நேரடி நிகழ்வு!!

01:57 PM (IST) Aug 15

ஆக.,25ஆம் தேதி முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்!

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வருகிற 25ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

01:32 PM (IST) Aug 15

சுதந்திர தின விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை: மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார்

01:00 PM (IST) Aug 15

முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

"மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் - வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் - அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலைநாள்-இல் உறுதியேற்போம்!" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

12:54 PM (IST) Aug 15

சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்.. இவை தான் நாட்டை மாற்றும் தாரக மந்திரங்கள்.. பிரதமர் மோடி உரையின் ஹைலைட்ஸ்

ஊழல், குடும்ப ஆட்சி, சமாதான கொள்கை ஆகியவை இந்தியாவுக்கு முக்கிய தடைகள் என்றும் இந்த மூன்று தீமைகளுக்கு எதிராக முழு சக்தியுடன் போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12:42 PM (IST) Aug 15

காவிரி பிரச்சினை: தமிழகம் உச்ச நீதிமன்றம் செல்ல தேவையில்லை - டிகே சிவக்குமார்!

காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு இவ்வளவு விரைவாக தமிழ்நாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

12:11 PM (IST) Aug 15

முதன்முறையாக கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடும் ஜம்மு-காஷ்மீர்!

ஜம்மு-காஷ்மீர் மக்கள் முதன் முதலாக எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள்

11:10 AM (IST) Aug 15

அட்ரா சக்க... வசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்..! 5-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் காலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்ட் 10ஆம் தேதி, வெளியான 'ஜெயிலர்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க 
 

11:04 AM (IST) Aug 15

முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 77வது சுதந்திர தினத்தையொட்டி 3வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

 

11:01 AM (IST) Aug 15

இந்தியாவில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய சிங்கப்பூர் முடிவு!

இந்தியாவில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய சிங்கப்பூர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

11:01 AM (IST) Aug 15

ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது: சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு!

வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது என சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேசியுள்ளார்.
 

09:59 AM (IST) Aug 15

ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ பணியாளர்களுக்கு நல வாரியம்

சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கி வருகின்றனர்; நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள

09:49 AM (IST) Aug 15

கட்டணமில்லா பயணம் இனி விடியல் பயணம்!!

மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திட்டத்திற்கு 'விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

09:32 AM (IST) Aug 15

நீட்டை எப்படி அகற்ற முடியும்?

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை
 

09:29 AM (IST) Aug 15

பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிறைவு

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நிறைவு பெற்றது.
 

09:28 AM (IST) Aug 15

செங்கோட்டையில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற விருந்தினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

09:25 AM (IST) Aug 15

மகளிர் கட்டணமில்லா பேருந்தில் 50 லட்சம் பயணிகள்

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் கீழ், தினசரி 50 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இதன் மூலம் ரூ.850க்கு மேல் சேமிக்கப்படுகிறது - முதல்வர் ஸ்டாலின்
 

09:24 AM (IST) Aug 15

பிரதமர் மோடி சுதந்திர தின பேச்சு!!

டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமர் மோடி சுதந்திர தின பேச்சு!!

09:21 AM (IST) Aug 15

முதல்வர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின பேச்சு!!

சென்னை கோட்டை கொத்தளத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!!

09:21 AM (IST) Aug 15

முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு பல்துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது - சுதந்திர தின உரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
 

09:19 AM (IST) Aug 15

தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் உயர்வு

தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ. 10,000லிருந்து ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு

09:17 AM (IST) Aug 15

55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்

நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் - சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

09:15 AM (IST) Aug 15

ஊழலை எதிர்த்து போராட வேண்டும் - பிரதமர் மோடி

“2047ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, நமது நாடு வளர்ந்த இந்தியாவாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது நாட்டின் திறன் மற்றும் கிடைக்கும் வளங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். ஆனால், காலத்தின் தேவை மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது - ஊழல், வம்சம் மற்றும் சமாதானம்.”  என்று சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

09:14 AM (IST) Aug 15

வாரிசு அரசியலை விமர்சித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது வாரிசு அரசியல் குறித்து பேசினார். “ஒரு அரசியல் கட்சிக்கு ஒரே குடும்பம் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்? அவர்களின் வாழ்க்கை மந்திரம் குடும்பம், குடும்பம் மற்றும் குடும்பம் மட்டுமே.” என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.

09:10 AM (IST) Aug 15

செங்கோட்டையில் இருந்து பிரதமரின் உரை!!

200 கோடி கோவிட் தடுப்பூசியை அடைந்துள்ளோம். 5G வெளியிடுவதில் நாம் வேகமாக செயல்பட்டோம். 2030 ஆம் ஆண்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய நமது இலக்குகள் 2021-22 இல் நிறைவேற்றப்பட்டன. 20% எத்தனால் கலப்பு இலக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டது. 500 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கான நமது  இலக்கும் காலக்கெடுவுக்கு முன்பே எட்டப்பட்டது.

09:09 AM (IST) Aug 15

அடுத்த முறையும் கொடியேற்றுவேன் - பிரதமர் மோடி

“2019ஆம் ஆண்டில், செயல்திறன் அடிப்படையில், நீங்கள் என்னை மீண்டும் ஒருமுறை ஆசீர்வதித்தீர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் முன்னோடியில்லாத வளர்ச்சிக்கானது. 2047இன் கனவை நனவாக்கும் மிகப்பெரிய பொன்னான தருணம் வரும் ஐந்தாண்டுகள். அடுத்த முறை ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த செங்கோட்டையில் இருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைக்கிறேன்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

09:04 AM (IST) Aug 15

சுதந்திர தினம்: மூவர்ண கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தையொட்டி, புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்

08:21 AM (IST) Aug 15

இதுவே பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரை: மம்தா பானர்ஜி!

பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரை இதுவாகவே இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

07:56 AM (IST) Aug 15

77-வது சுதந்திரன தினம்: டெல்லி செங்கோட்டையில் 10-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கோடியை ஏற்றினார்.

07:44 AM (IST) Aug 15

அஞ்சலி செலுத்துகிறேன் - பிரதமர் மோடி பேச்சு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கிய அனைத்து துணிச்சலான இதயங்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன் - பிரதமர் மோடி சுதந்திர தின பேச்சு

07:37 AM (IST) Aug 15

சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக கொடியேற்றும் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக மூவர்ண கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றவுள்ளார்

07:16 AM (IST) Aug 15

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07:14 AM (IST) Aug 15

மூவர்ண கொடியேற்ற ரெடியான பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் கொடியேற்ற பிரதமர் மோடி தயாராக உள்ளார்

07:06 AM (IST) Aug 15

மன்மோகன் சிங் சாதனையை சமன் செய்யும் மோடி

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 10ஆவது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்யவுள்ளார்
 

07:05 AM (IST) Aug 15

கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் 3ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றவுள்ளார். தகைசால் தமிழர் விருது, சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருது, காவல் விருது உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
 

07:04 AM (IST) Aug 15

செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு

நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி கொடியேற்றவுள்ளதால், வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி காவல் பணியில் 10,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
 

06:59 AM (IST) Aug 15

சுதந்திர தினம்

இந்தியா தனது 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. அதிகாலை முதலே நாடு முழுவதும் பொதுமக்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி, சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட வீரர்களை நினைவு கூர்ந்து வருகிறார்கள்.