திருச்சியில் 50 சவரன் நகை கொள்ளை...! பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்..! 

 
Published : Jan 02, 2018, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
திருச்சியில் 50 சவரன் நகை கொள்ளை...! பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்..! 

சுருக்கம்

Break the locked locked house in Trichy and 50 shavings jewelery robbery

திருச்சியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். 

இவர் தினமும் காலை 10 மணிக்கு கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மதியம் உணவுக்கு வீட்டுக்கு வருவார். 

அதேபோல் இன்றும் காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து சுரேஷ்குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 25 December 2025: கிறிஸ்துமஸ் நாள்.. விழாக்கோலம் பூண்ட தேவாலயங்கள்..!
நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு