
2018 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒப்பிட்டு நடத்திய ஆய்வில் மிக பெரிய ஐந்து நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உலக அளவில் ஏற்பட கூடிய நிலநடுக்கம் பற்றி ஆய்வு மேற்கொண்டது.
அதில்,2018 ஆம் ஆண்டில், 5 மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும்,
ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளை விட அதிகமாக இருக்கும் என்றும் அறிக்கை விட்டுள்ளது.
காரணம்
பூமி சுழற்சியின் வேகம்,கடந்த 100 ஆண்டுகளில் சற்று குறைந்துவிட்டதால் தான் ஏற்கனவே பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐந்து இடங்களில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளதால்,மக்கள் சற்று பீதி அடைய தொடங்கி உள்ளனர்.