பைக் மீது குப்பை லாரி மோதி வாலிபர் பலி… - ஹெல்மெட் அணிந்தும் பரிதாப சாவு

Published : Dec 29, 2018, 06:04 PM IST
பைக் மீது குப்பை லாரி மோதி வாலிபர் பலி… - ஹெல்மெட் அணிந்தும் பரிதாப சாவு

சுருக்கம்

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருேக மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருேக மாநகராட்சி குப்பை லாரி மோதியதில் வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறையை சேர்ந்த சுதாகர் (28) என்பவர், வடபழனியில் தங்கி மணலியில் உள்ள ரசாயன கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேளச்சேரியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு வடபழனி நோக்கி பைக்கில் சென்றார்.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி இவரது பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சுதாகர் தலை மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் தரமற்ற முறையில் இருந்ததால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் சங்கரை (53) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஒருசில தனியார் நிறுவனங்கள் தரமற்ற ஹெல்மெட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன. பொதுமக்களும் போலீசாரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தரமற்ற ஹெல்மெட்டை வாங்கி ஏமாறுகின்றனர்.

பொதுமக்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று அறிவுறுத்துகின்ற போலீசார் தரமான ஹெல்மெட்டை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்,’’ என்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!