அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் பொங்கல் போனஸ்... எடப்பாடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!

By Thiraviaraj RMFirst Published Jan 8, 2019, 7:07 PM IST
Highlights

அரசு ஊழியர்களுக்கு ஒருமாதகால அளவிலான சம்பளத்தை  பொங்கல் போனஸாக அறித்து எடப்பாடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அரசு ஊழியர்களுக்கு ஒருமாதகால அளவிலான சம்பளத்தை  பொங்கல் போனஸாக அறித்து எடப்பாடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து தமிழ்க நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சி.மற்றும் டி பிரிவில் உள்ள பள்ளி, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் 30 நாட்களுக்கான பணப்பலனை போனஸாக அறிவித்துள்ளனர். அதாவது அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.

தொகுப்பு ஊதியம் ,சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோர்க்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும்,மேலும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்,ஒப்பந்த பணியாளர்கள் இவர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸை  தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் ரூ.2000 ஓய்வூதியம் பெறுவோர்க்கு ரூ.500 வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. மார்ச் 2018க்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த போனஸ் பொறுந்தாது. அதேபோல் ஏ மற்றும் பி பிரிவு அரசு அதிகாரிகளுக்கு இந்த போனஸ் விதிகள் பொறுந்தாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறைக்கு 6 நாட்கள் விடுமுறை, பொங்கல் பண்டிக்கைக்கு ரேஷன்கார்டுகளுக்கு 1000 ரூபாய், தீபாவளி விடுமுறை என எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவே எடுக்காத தாராளர நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த்துள்ளனர்.  

click me!